×
 

வாயத் தொறந்தாலே பொய்.. லோக் ஆயுக்தா வாக்குறுதி என்ன ஆச்சு முதல்வரே? அன்புமணி சரமாரி கேள்வி..!

லோக் ஆயுக்தா அமைப்பு வலுப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என அன்புமணி கேள்வி எழுப்பினார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுகவை கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக தான் நமது எதிரி என்று கூறி வருகிறார். திமுக அரசு செய்துள்ள நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும், மக்களுக்கு துரோகம் அளிப்பதாகவும் பல விஷயங்களை எடுத்துக் கூறி வருகிறார். 

இந்த நிலையில், விடியல் எங்கே என்ற புத்தகத்தை வெளியிட்டு அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளின் பட்டியல் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, 2021 சட்டமன்ற தேர்தலில் 505 வாக்குறுதிகளை திமுக கொடுத்ததாக தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வில்லை என குற்றம் சாட்டினார்.

கருவுற்ற பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த புத்தகத்தில் ஒரு பொய்யை கூட கூறவில்லை என்றும், திமுக கூறிய பொய்களை மட்டுமே எடுத்துக் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை தமிழ்நாடு மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இதையும் படிங்க: ஓரங்கட்டப்பட்ட அன்புமணி! ராமதாஸ் மகளுக்கு கட்சிப் பதவி? பாமகவில் பரபரப்பு..!

திமுகவிற்கு எவ்வளவு பெரிய வாய்ப்புகளை மக்கள் கொடுத்துள்ளார்கள் என்றும் ஆனால் திமுக மக்களுக்கு கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார். மூன்று தேர்தல்களில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளதாகவும், மாற்றாக திமுக மக்களுக்கு கிடைத்தது எல்லாம் ஏமாற்றம், பொய், ஊழல் என கூறினார்.

373 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் 66 எனவும், முழுமையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் 66 எனவும் தெரிவித்தார். 98 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக திமுக போய் கூறி வருவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் என்னை ஏமாளிகளா என்று கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: அன்புமணியை என்ன செய்ய காத்திருக்கிறார்களோ?- ராமதாஸ் உடன் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு தீவிர ஆலோசனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share