×
 

ஓரங்கட்டப்பட்ட அன்புமணி! ராமதாஸ் மகளுக்கு கட்சிப் பதவி? பாமகவில் பரபரப்பு..!

ராமதாஸ் தரப்பு பாமகவில் அவரது மகன் ஸ்ரீகாந்திக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முகுந்தனுக்கு பதவி அளித்ததில் தொடங்கி பாமக இரண்டாக உடைந்து ராமதாஸ் ஒரு பக்கமும் அன்புமணி ஒரு பக்கமும் என கட்சியை நடத்திக் கொண்டு வருகின்றனர். தொண்டர்கள் துண்டாடப்பட்டு யாரை ஆதரிப்பது என்பது தெரியாமல் அல்லாடி வருகின்றனர். செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள், சுற்றுப்பயணம் என தனித்தனியாக நடத்தி வருகின்றனர். தந்தைக்கும் மகனுக்குமான பனிப்போர் முற்றி மோதல் நிலவி வருகிறது.

இன்னும் அவை ஓய்வதாக தெரியவில்லை. இருவரும் மாறி மாறி குறை கூறி வருகின்றனர். இருப்பினும் நல்ல செய்தி வரும் என்ற அடிக்கடி ராமதாஸ் கூறுவதை பார்த்து இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் சூழ்நிலையில், மீண்டும் மீண்டும் நிகழும் சில சம்பவங்கள் அவற்றை பிரதிபலிப்பாகவே தெரியவில்லை என்றனர் விமர்சகர்கள்.

தொடர்ந்து அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது. அன்புமணி பாமகவின் தலைவர் கிடையாது என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது. இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க முகுந்தனின் தாயாரும் ராமதாஸின் மகளும் ஆன ஸ்ரீகாந்தி பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு கட்சிப் பதவி கொடுக்கப்படும் என்றும் அன்புமணியை ஓரங்கட்டும் நிகழ்வாகவும் பார்க்கப்பட்டது. ஸ்ரீகாந்தி கட்சிப் பதவிக்காக வரவில்லை என்றும் ஒரு பக்கம் சொல்லப்பட்டது. ராமதாஸ் பொதுக்குழுவில் நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி என்று அறிமுகப்படுத்தப்பட்டார். 

இதையும் படிங்க: #BREAKING: ஓரங்கட்டப்பட்ட அன்புமணி…கூட்டணி முடிவெடுக்க ராமதாசுக்கே முழு உரிமை! பரபரக்கும் அரசியல் களம்

இந்த நிலையில், ஸ்ரீகாந்திக்கு கட்சிப் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில் ஸ்ரீகாந்திக்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்புமணிக்கு மாற்றாக பாமகவில் ஸ்ரீகாந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ராமதாஸ் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: #BREAKING: பாமகவின் தலைவர் ராமதாஸ் தான்… பொதுக்குழுவில் முக்கிய தீர்மானம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share