பாமகவில் ட்விஸ்ட்! அன்புமணிக்கு போட்டியாக களமிறங்கிய சகோதரி! பரபரக்கும் அரசியல் களம்..!
ராமதாஸ் தரப்பு செயற்குழு கூட்டத்தில் அவரது மகள் ஸ்ரீகாந்தி பங்கேற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகுந்தன் பரசுராமன், ராமதாஸின் மகள்வழிப் பேரன். அன்புமணி ராமதாஸின் அக்காவான காந்திமதி - பரசுராமன் தம்பதியினரின் மகன் தான் முகுந்தன். பாமகவில் மாநில ஊடகப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்த முகுந்தன், அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. கட்சியே இரண்டாக உடையும் சூழலுக்கு சென்ற நிலையில், ராமதாஸ் - அன்புமணி மோதலை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் பதவியை முகுந்தன் ராஜினாமா செய்தார். அன்று முதல் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் இருவரும் இரு துருவங்களாக மாறிவிட்டனர். கட்சியை தூண்டாடி தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களையும் பொதுக்குழு கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு கல்லூரிக்கு ராஜேந்திர சோழன் பெயரா? பரபரப்பை கிளப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ்!!
ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை முற்றி வருகிறது. சமீபத்தில் செயற்குழுவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கி இருந்தார். அதுமட்டுமில்லாத 21 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டார். இதற்கு முன்னதாக பாமக எம்எல்ஏ அருளை கட்சிப் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் கட்சியிலிருந்தே அன்புமணி நீக்கிவிட்டார். அன்புமணி தரப்பு எம்எல்ஏக்களும் சபாநாயகரை சந்தித்து அருளைக் கட்சியில் இருந்து நீக்குவதற்கும் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கும் கடிதம் கொடுத்தனர்.
பாமக கொறடா பதவியில் இருந்த அருளை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மயிலம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சிவகுமார் பாமக புதிய கொறடாவாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளின் செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் பொதுவெளியில் அன்புமணி பேசுவதற்கு கண்டனம் தெரிவித்தும், கட்சியின் நிறுவனத் தலைவரை களங்கப்படுத்தும் வகையில் அன்புமணி பேசுவதற்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ராமதாஸ் தரப்பில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில், ராமதாஸின் மகளும் அன்புமணியின் சகோதரியமான ஸ்ரீகாந்தி செயற்குழுவில் பங்கேற்று உள்ளார். பாமக செயற்குழு மேடையில் அன்புமணியின் சகோதரி ஸ்ரீ கார்த்திக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனுக்கு பதவி வழங்கப்பட்டதால் தொடங்கிய மோதல் வெடித்துள்ள நிலையில், ஸ்ரீகாந்தி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று இருப்பது அன்புமணிக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. இப்ப மாங்காயே ரெண்டு! ஜி.கே. மணியை வெச்சுக்கிட்டே நக்கலடித்த அமைச்சர்..!