சீறிப்பாயும் மேகமலை அருவி... 13வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு...!
மேகமலை அருவியில் குளிக்க 13வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஆண்டிபட்டி அருகே மேகமலை அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாபயணிகள் அருவியில் குளிக்க 13 வது நாளாக தடை விதிப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் அமைந்துள்ளது மேகமலை அருவி . மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை வெள்ளிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக மேகமலை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க 13 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது .
மேகமலை வனத்துறையினர் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இதையும் படிங்க: கரீபியன் நாடுகளை புரட்டிப்போட்ட மெலிசா! 170 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு! 30க்கும் மேற்பட்டோர் பலி!
அருவியில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கால் அருவியில் குளிக்கும் இடத்தில் போடப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் அடித்து செல்லப்பட்டும் , நடந்து செல்லும் படிக்கட்டுகள் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டும் உள்ளது .
இதனால் மேகமலை அருவி அமைந்துள்ள பகுதி மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிப்பதால்
இதே சூழலில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று 13 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது
இவற்றை சீரமைத்த பின்பே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுபவர் என்று மேகமலை வனத்துறையினர் அறிவித்துள்ளனர
Sir
இதையும் படிங்க: கூட்டணிக்கு கூப்ட்டா பலவீனமா? விஜய்க்கு அந்த பொறுப்பு இருக்கு...! தமிழிசை பதிலடி...!