×
 

சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... 165 கி.மீ தூரத்தை கடந்து தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்...!

ஆந்திரா அரசு திறந்துவிட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான  ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் நீர் வந்தடைந்தது.

சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு -கங்கை திட்ட ஒப்பந்தத்தின் படி கண்டலேறு  அணையில் இருந்து ஆந்திரா அரசு திறந்துவிட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான  ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் நீர் வந்தடைந்தது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஒப்பந்தத்தின்படி ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி  ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என, 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்கி வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருவதால், ஜனவரி  முதல் ஏப்ரல்  வரை வழங்க வேண்டிய இரண்டாம் கட்ட கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும் எனக்கோரி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்பாசனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதம் எழுதினர். 

கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி முதற்கட்டமாக 500 கன அடி வீதம் தண்ணீரில் ஆந்திரா அரசு திறந்து விட்டது. அது  படிப்படியாக  அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில்   கடந்த மார்ச் 29ஆம் தேதி முற்றிலுமாக நீர் நிறுத்தி இருந்தது. இந்நிலையில் மீண்டும் சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை ஆந்திரா அரசு நேற்று முன் தினம் வினாடிக்கு 1900 கன அடி திறந்து விட்டது.

இதையும் படிங்க: இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

இந்த நீர் 152 கிலோ மீட்டர் பயணித்து இன்று ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டிற்கு 
43 கனஅடி  நீர் வந்தடைந்தது. அந்த நீர்  பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தேக்கி வைத்து சென்னை குடிநீருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டத்திற்கான கிருஷ்ணா நதி நீர் இதுவரை 1.09 டி.எம்.சி நீர் நமக்கு கிடைத்துள்ளது. 2.81 டி.எம்.சி நீர் இன்னும் நமக்கு கிடைக்க வேண்டியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகளில் கிருஷ்ணா நீர் சேமித்து வைக்கப்பட்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: அதை செய்தாலும் இனி ஈரான் தப்பிக்க முடியாது... உலகமே அதிரே ஒரே போடாய் போட்ட டிரம்ப்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share