கொம்பு வெச்ச சிங்கம்டா..! வாடி வாசலில் சீறிப்பாய்ந்த அண்ணாமலையின் காளை..! அலறிய வீரர்கள்..!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் காளை வெற்றி பெற்றது.
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது பொங்கல் திருவிழாவின் முக்கிய அங்கமாக, குறிப்பாக மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறுவது வழக்கம். இந்த விளையாட்டில் காளைகளை அடக்கி திமிலைப் பிடித்து குறிப்பிட்ட தூரம் செல்வது அல்லது கொம்பில் கட்டப்பட்ட பரிசுப் பொருளை எடுப்பது போன்ற சாகசங்கள் இடம்பெறும். இதன் மூலம் காளை உரிமையாளர்கள் தங்கள் விலங்குகளின் வலிமையையும், பயிற்சியையும் காட்டுவதோடு, ஊரின் பெருமையையும் வெளிப்படுத்துகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் சொந்தமாக வைத்திருக்கும் காளைகள் இடம்பெறுகின்றன.
உதாரணமாக, பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் போன்ற புகழ்பெற்ற இடங்களில் நடக்கும் போட்டிகளில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அல்லது அவர்களது உறவினர்களின் காளைகள் பங்கேற்பது பொதுவான காட்சியாக மாறியுள்ளது. இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க காளையர்கள் களமிறங்கினர்.
காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு களம் கண்டு வருகின்றனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை அடக்குவதற்காக வீரர்கள் காத்திருக்கின்றனர். காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வீரர்களை மிரட்டியது. அதிலும் சில வீரர்கள் காளைகளை அடக்கி வெற்றி வாகை சூடினார். அவர்களுக்கு தங்க காசு போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: உங்க REPORT CARD வாக்குறுதி என்ன ஆச்சு? சொல்லுங்க ஸ்டாலின்.. நயினார் சரமாரி கேள்வி..!
இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் காளை களம் கண்டது. அதேபோல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் காளையும் களம் இறக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட காளை சீறிப்பாய்ந்தது. காளை சீறிப்பாய்ந்து துள்ளி குதித்து வெளியே வரும்போது அனைவரையும் மிரட்டியது. இதனால் அரண்டு போன வீரர்கள் வாடிவாசல் பகுதியில் இருந்து சிதறினர். அண்ணாமலையின் காளையானது பிடிப்படாமல் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: உழவர் திருநாளில் ஊற்றிக் கொடுத்த திமுக..! பண்டிகை காலத்தில் சாராய விற்பனை..! உறுத்தலாயா? நயினார் விளாசல்..!