வரலாற்றில் மோடி! இது உன்னதமான தருணம்... பிரதமரின் சோழ தேச வருகை குறித்து அண்ணாமலை பெருமிதம்
ராஜேந்திர சோழனின் மரபை பிரதமர் மோடி மீட்டுருவாக்கம் செய்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.
முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது. தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு, மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூரும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவுடன் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். சோழர் கால சிற்பங்கள் சோழர்களின் படை வலிமை நாணயங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து சிவபெருமானை வழிபட்ட பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். தொடர்ந்து சிறப்பு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி, விழா மேடையில் பேசினார்.
இதையும் படிங்க: மதியாதார் தலைவாசல் மிதியாதே! ஓபிஎஸ்- க்கு அறிவுரை சொன்ன மாஜி அமைச்சர்
இந்த நிகழ்வு தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். கங்கை நதியின் புனித நீரை, கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பிரகதீஸ்வரருக்குக் கொண்டு வந்ததன் மூலம், மாமன்னர் ராஜேந்திர சோழனின் போற்றுதலுக்குரிய மரபை,பிரதமர் மோடி மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் என தெரிவித்தார்.
வாரணாசியிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டிய மாமன்னர் ராஜேந்திர சோழனின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினை நினைவுபடுத்தியது மூலம், பிரதமர் மோடி வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார் என தெரிவித்தார்.
தமிழகத்தின் மகத்தான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பினைப் போற்றும், மற்றுமொரு உன்னதமான தருணம் இது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: சோழ தேசத்தில் முப்பெரும் விழா! வேட்டி, சட்டையில் கலக்கலாக வந்த பிரதமர்…