×
 

மதியாதார் தலைவாசல் மிதியாதே! ஓபிஎஸ்- க்கு அறிவுரை சொன்ன மாஜி அமைச்சர்

தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சரும், முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) குறித்து, பாஜக அவரை புறக்கணிப்பதாக எழுந்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன. இந்த விமர்சனங்கள், தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணியின் இயக்கவியல் மற்றும் உள் அரசியல் மோதல்களை பிரதிபலிக்கின்றன. 

ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் முக்கிய தலைவராகவும், தேனி மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தலைவராகவும் திகழ்ந்தவர். மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்த இவர், பலமுறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். 2017-ல் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பின்னர் தனித்தனி அணியாகவும் செயல்பட்டார்.

இருப்பினும், 2022-ல் கட்சியின் பொதுக்குழு மூலம் இபிஎஸ் ஒரே தலைவராக உயர்த்தப்பட்டதால், ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்தப் பின்னணியில், பாஜகவுடனான கூட்டணி மற்றும் அதன் அரசியல் உத்திகளில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படிங்க: ஓபிஎஸுக்கு நோ சொன்ன பிரதமர் மோடி.. ஹேப்பி மோடில் எடப்பாடி..!

தமிழகத்தில் பாஜக தனது அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்த முயலும் நிலையில், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவை முக்கிய கூட்டணி பங்காளியாக கருதியது. இதனால், ஓபிஎஸ்-இன் அணியை புறக்கணிப்பது, பாஜகவின் பரந்த அரசியல் உத்தியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

மேலும், பாஜக இபிஎஸ்-உடன் நெருக்கமாக செயல்படுவதாகவும், ஓபிஎஸ்-ஐ தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், NDA கூட்டணி ஒரு ஆபத்தான கூட்டணி என முன்னாள் அமைச்சர் பன்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். பாஜக கூட்டணி தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காது என்றும் ஓபிஎஸ்-க்கு நன்மை இல்லை எனவும் தெரிவித்தார்.

அவர் வெளியே வந்துவிட்டால் நிம்மதி என்று கருதி அவர் தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார்.  ஓபிஎஸ்ஐ பாஜக புறக்கணிக்கிறது என்பதை அவர் வரப்பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: இப்பயும் NDA கூட்டணியில் இருக்கீங்களா? மழுப்பலாக பதிலளித்த ஓபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share