TVK அரசுக்கு ஒரு வருஷம் டைம்..! அவங்க புதுசுய்யா..! நிலைப்பாட்டை விளக்கிய அண்ணாமலை..!!
தவெக அரசுக்கு ஓராண்டு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் அரசியல் களம் சமீப காலமாக புதிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் அமைந்த புதிய அரசு, பொறுப்பேற்ற சில வாரங்கள் முதல் மாதங்களுக்குள் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டமூலங்கள் மற்றும் அரசின் சட்டரீதியான நடவடிக்கைகள் “சரியில்லை” என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகின்றன.
இதேவேளையில், புதிய அரசுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த இரு தரப்பு நிலைப்பாடுகளும் தமிழக அரசியலை சூடுபிடிக்கச் செய்துள்ளன. எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக தலைமையிலான எதிரணி, இந்த சட்டதிட்டங்கள் அவசரக் கோலத்தில் கொண்டுவரப்படுவதாகவும், போதிய விவாதமின்றி நிறைவேற்றப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றன.
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பொதுவான ஆட்சி விமர்சனங்களுடன் இணைத்து, சட்டமூலங்களின் தரம் மற்றும் செயல்பாட்டு விவரங்கள் போதுமானதாக இல்லை என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஓராண்டு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் எந்த தடையும் போடக்கூடாது எனவும் we the leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதிய அரசுக்கு தங்களை நிலைநிறுத்திக் கொள்ள குறைந்தபட்சம் ஒரு வருட காலம் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் உயிர்நாடி காவிரி..! மேகதாதுவுக்கு எதிர்ப்பு..! அமைச்சர் ஆனந்தை சந்திக்கும் அன்புமணி..!!
தமிழக வெற்றி கழக அரசு நல்லது செய்தால் முதல் ஆளாக வரவேற்போம் என்றும் அமெரிக்காவில் நடந்த we the leaders நிகழ்ச்சிகள் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக வந்திருக்கக்கூடிய அமைச்சர்கள் பலர் இதுவரை நகர்மன்ற உறுப்பினராக கூட இருந்ததில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். தமிழக வெற்றி கழக அமைச்சர்களுக்கு இடவசதியும் காலமும் கொடுக்காமல் அவர்கள் எப்படி சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். ஊழலை யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களை நாம் வரவேற்போம் எனவும் அந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியுள்ளார்.
இதையும் படிங்க: எதையும் உருப்படியா உருவாக்க வக்கில்ல... விஜய் அரசே வெட்கமே இல்லையா? - விடிந்ததுமே வெடித்தெழுந்த திமுக...!