பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!
முதல்வர் ஸ்டாலின் பொய் பேசி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது ஏன் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தலுக்கு மத்தியில் வலுக்கட்டாயமாக ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் தொகுதி மறு வரையறை தொடர்பான சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்காக 16ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வாசல் வரை ஆபத்து வந்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது வீடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்கள் கவனம் தேர்தலில் இருக்கும் என்று எண்ணி கமுக்கமாக தொகுதி மறுவறையை முன்னெடுப்பதாகவும் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்றால் பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தொகுதி மறு வரையறை தொடர்பாக தமிழ்நாட்டில் விடுக்கப்படுவது மிரட்டல் அல்ல என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
அவசர அவசரமாக தொகுதி மறு வரையறை செய்வதற்கு முயற்சிப்பது தென் மாநில உரிமை படுகொலை என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆட்சி அதிகாரம் எல்லாம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான். என்றும் கொள்கையும் மாநில உரிமையும் தான் முக்கியம் எனவும் பேசினார்.
இதையும் படிங்க: முதல்வர் சாப்பிடும் இட்லிக்கு சட்னியா..? சாம்பாரா..? இதுதான் சரிபார்ப்பு தள நிலைமை..! விளாசிய அண்ணாமலை..!!
இந்த நிலையில், பிரதமருக்கு எச்சரிக்கை விடுப்பதா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்றும் 39-லிருந்து 59 ஆக உயரவே வாய்ப்புள்ளது என்றும் கூறினார். எதற்காக பொய் பேசி மக்களிடம் அச்சத்தை மக்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்குகிறார் என்ற கேள்வி எழுப்பினார். பிரதமருக்கு எச்சரிக்கை விடுப்பதா என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் MLA..! அண்ணாமலை விமர்சனம்..!