×
 

சரித்திர பதிவேடு குற்றவாளி வெளியில் சுத்துற அளவுக்கு மெத்தனம்..! கேள்விகளால் துளைத்த அண்ணாமலை..!!

தூத்துக்குடி மாணவி கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி விவகாரத்தை அண்ணாமலை பல்வேறு கேள்விகளால் துளைத்துள்ளார்.

தூத்துக்குடியில் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி முனீஸ்வரன் விவகாரத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை என்றும் குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுவதாக தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார் என்றும் வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், செய்திகள் வெளியாகி கொண்டிருப்பதாக கூறினார்.

ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது என்றும் மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: EPS தான் முதலமைச்சர்... வலுவான கூட்டணி..! அடித்துச் சொல்லும் அண்ணாமலை..!!

மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே என்றும் பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் எனவும் தெரிவித்தார். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: எங்கும் கஞ்சா...65 வயது மூதாட்டி மீது பாலியல் தாக்குதல்..! அண்ணாமலை கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share