×
 

EPS தான் முதலமைச்சர்... வலுவான கூட்டணி..! அடித்துச் சொல்லும் அண்ணாமலை..!!

இபிஎஸ் முதல்வர் ஆவார் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி உறவு தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மிக முக்கியமான திருப்பமாக உருவெடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தாலும், தற்போது அது மீண்டும் வலுவான கூட்டணியாக மாறியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இந்த கூட்டணியை வலுவாக முன்னெடுத்து வருகிறார். அவரது தலைமையில் அதிமுக தன்னை மீட்டெடுத்து, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிட்ட போதிலும், தேர்தல் தோல்விக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

அதிமுக தனித்து நின்று செயல்பட முயன்ற காலகட்டத்தில் பாஜக தனது வாக்கு வங்கியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக ஆட்சியின் மீதான அதிருப்தி அதிகரித்த நிலையில், இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. அமித் ஷா, பியூஷ் கோயல் போன்ற முக்கிய பாஜக தலைவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய சந்திப்புகள் இதற்கு வழிவகுத்தன. இறுதியாக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: NDA கூட்டணியில் விஜய்... - END கார்டு போட்ட தவெக... பரபரக்கும் அரசியல் காரணங்கள்...! 

இதனிடையே, தமிழகத்தில் என்டிஏ கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தலில் வென்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார் எனவும் கூறியுள்ளார். மேலும், திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் கரூர் ஆட்சியர் மற்றும் எஸ்பிஐ மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: NDA கூட்டணியில் விஜய்? அசைக்க முடியாது... DMK தான்..!! அடித்து சொல்லும் அமைச்சர் முத்துச்சாமி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share