NDA கூட்டணியில் விஜய்? அசைக்க முடியாது... DMK தான்..!! அடித்து சொல்லும் அமைச்சர் முத்துச்சாமி..!!
மீண்டும் ஆட்சி அமைக்கும் வலிமை திமுகவுக்கு இருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில், சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் 224 நபர்களுக்கு அமைச்சர் முத்துசாமி பட்டாகளை வழங்கினார். அதன் பின் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் உள்ள தமிழ்நாட்டின் முதல் தொட்டி பாலத்தை அகற்றாமல், கால்வாயை சீரமைக்கவும், அதன் அருகிலேயே புதிய பாலம் அமைத்து விட்டு, பாரம்பரியமான பழைய பாலத்தை மக்களின் காட்சிக்காக வைக்க ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
NDA கூட்டணியில் தவெக இணைக்க முயற்சிகள் நடக்கிறதே என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், திமுக கூட்டணி வலிவாக உள்ளது என்றும் யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும் எதிர்கொள்ளும் வலிமை திமுக கூட்டணிக்கு உள்ளது எனவும் கடந்த சட்ட மன்ற, நாடாளுமன்ற தேர்தலை விட மிகப்பெரும் வெற்றியை இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் உறுதிப்படுத்த தெரிவித்துள்ளார்.
அரசு செய்த திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சரை மீண்டும் அரியணையில் ஏற்றும் என்றும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனவும் கூறியுள்ளார். மே.31 க்குள் காலி மதுபாட்டில் திருப்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மதுபான நிறுவனங்கள் மூலமாக மது பாட்டில்களில் லேபிள் ஒட்ட பேசி வருகிறோம். அதற்கு கால அவகாசம் கேட்டுள்ளனர்.பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தனியார் ஏஜன்சியிடம் ஒப்படைக்க பேசி வருகிறோம். இது குறித்து வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். இதில் டாஸ்மாக் ஊழியர்களின் பணி சுமை குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை... போலீசை செருப்பால் அடித்த மாணவி..! கிழித்து தொங்கவிட்ட தவெக..!!
ரஜினியை திமுக மிரட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், ரஜினி சொல்ல வேண்டிய விசயம் என்றும் பாதிப்பு எனில் அவர் தான் கூறி இருக்க வேண்டும்., அப்படி எதுவும் நடக்கவில்லை. இன்றும் அவர் எங்களுடன் அன்பாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: "Wildlife of Tamilnadu"...!! புத்தகத்தை வெளியிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்.!!