×
 

ஓட்டு திருடிதான் நீங்க ஜெய்ச்சீங்களா ராகுல்? பூந்து விளாசிய அண்ணாமலை!

வயநாடு மற்றும் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி வாக்குகளை திருடி வெற்றி பெற்றாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வாக்கு திருட்டு முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் உள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் சுமார் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலியானவை என்றும் கூறினார். 

வாக்குத்திருட்டு என்ற சர்ச்சையை கிளப்பி ராகுல்காந்தி பொய்களை கூறி வருவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தினமும் பொய்களைச் சொல்லி பின்பு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு சுற்றி தெரிவது தான் ராகுல் காந்தியின் வழக்கம் என்றும் ராகுல் காந்தியின் ஆதாரமற்ற பேச்சுகளுக்கு மயங்குவதை முதலமைச்சர் ஸ்டாலின் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: அவங்களால எதையுமே பேச முடியாது! கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி ஆவேசம்..!

வாக்குகளை திருடி வயநாடு மற்றும் ரேவதி தொகுதிகளில் வெற்றி பெற்றீர்களா என்றும் கேட்டார். மதுரை திருமங்கலம் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதிகளில் வாக்கு திருட்டு நடத்திய கட்சி திமுக என்ற சாடினார். வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிட்டு இப்போது ஜனநாயகம் குறித்து சொற்பொழிவுகளை வழங்கி வருகிறது திமுக என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க ராகுல் காந்தியை முதல்வர் வலியுறுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார். 

2008 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி ஒரு முறை, இரண்டு முறை அல்ல, நான்கு முறை தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பயன்படுத்துகிறது பாஜக... முதல்வர் ஸ்டாலின் சரமாரி சாடல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share