தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பயன்படுத்துகிறது பாஜக... முதல்வர் ஸ்டாலின் சரமாரி சாடல்!
தேர்தல் ஆணையத்தை பாஜக வாக்கு திருடும் இயந்திரமாக பயன்படுத்துகிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
வாக்காளர் சிறப்பு திருத்தம் என்பது ஏராளமான மக்களின் வாக்குகளை பறிப்பதற்கான நாச வேலை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பிலும் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும் வாக்காளர் சிறப்பு திருத்தம் பீகார் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடத்தப்படும் என்றும் போலி வாக்காளர்களை நீக்குவது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டார்.
இந்த நிலையில், பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல என்றும் மக்களின் ஆணையை திருடுவதற்கான திட்டமிட்ட சதி என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும் தேர்தல் ஆணையத்தை பாஜக தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: வாங்க முதல்வரே! திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ... மக்கள் உற்சாக வரவேற்பு!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாக்கு திருட்டு சான்றுகள் எந்த அளவிற்கு மோசடி நடந்துள்ளது என்பதை அம்பலப்படுத்துவதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு மாநிலத்திற்குமான முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அரசியல் ரீதியாக இயக்கப்படும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நமது ஜனநாயகத்தின் இந்த நாச வேலை குறித்து ஒரு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து இந்தியா கூட்டணி முற்றுகை போராட்டம் மற்றும் பேரணியை அறிவித்துள்ள நிலையில் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது என்றும் பாரதீய ஜனதா கட்சி பட்டப்பகலில் இந்தியாவின் ஜனநாயகத்தைக் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேயர் பிரியாவுக்கு ஏதாச்சு பேச தெரியுதா? சேகர்பாபுவ நாங்க கேட்டோமா? கொந்தளித்த தூய்மை பணியாளர்கள்