×
 

தெறிக்கவிடலாமா...!! - பாஜகவை பந்தாடிய அண்ணாமலை... கோவையில் கால் வைத்ததுமே செய்த தரமான சம்பவம்...!

கோவை வந்த அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தனது புதிய அரசியல் இயக்கமான “We The Leaders” மூலம் வேகமாக ஆதரவை திரட்டி வருகிறார். பாஜக தலைமை அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, புதிய பாதை, புதிய இயக்கம் மற்றும் புதிய பார்வையுடன் மக்களுக்காக செயல்பட விரும்புவதாக அறிவித்திருந்த அண்ணாமலை, ஜூன் 5-ஆம் தேதி தனது புதிய இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.

புதிய இயக்கம் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உறுப்பினர் சேர்க்கை மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை சுமார் 17 லட்சம் பேர் இந்த வீ தி லீடர் இயக்கத்தில் இணைந்துள்ளனர்.  பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலையின் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். 

அடுத்த பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசியலின் அடுத்த கட்டம் எந்த திசையில் நகரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இளைஞர்களை தனது இயக்கம் மூலம் ஒருங்கிணைப்பதைக் கண்டு பாஜக, திமுக, தவெக, நாதக போன்ற கட்சிகள் அதிர்ச்சியில் உள்ள நிலையில், கோவையில் அவருக்கு கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பை பார்த்து அரசியல் களமே அதிர்ந்து போயுள்ளது. 

கோவையில் அண்ணாமலை அண்ணா அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு! pic.twitter.com/GJJUEfnpL7

— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) June 13, 2026

இதையும் படிங்க: “what bro its very wrong bro...” - பாலியல் வழக்கில் தவெக நிர்வாகி கைது... விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்...!

கட்சியிலிருந்து விலகிய பின்னர் முதல் முறையாகக் கோவை வந்த அண்ணாமலையை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர்கள், ஒன்றிய மற்றும் மண்டல் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் அண்ணாமலையை உற்சாகமாக வரவேற்றனர். மேலும், இன்று கோவையில் நடைபெறும் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட இரண்டு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்துகொள்கிறார்.

இதையும் படிங்க: அரசியல் என்ட்ரி கன்பார்ம் ஆனால்... மெகா ட்விஸ்ட் வைத்த ராகவா லாரன்ஸ்... வீடியோவில் பேசியது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share