போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசு… அண்ணாமலை கடும் கண்டனம்..!
பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் 15 ஆண்டுகளாகப் போராடி வருவது துரதிருஷ்டவசமானது என அண்ணாமலை கூறினார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணாமலை பல்கலைக்கழகம், தனது நூறாவது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என இந்திய அளவில் புகழ்பெற்ற பலர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக, கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருவது துரதிருஷ்டவசமானது என்று கூறினார்.
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய, 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகள், முனைவர் பட்ட ஊக்கத்தொகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக ஆசிரியர்களும், ஊழியர்களும் பல ஆண்டு காலமாகக் கோரிக்கை வைத்து வருவதாகவும் ஆனாலும் இதுவரை தமிழக அரசு அவர்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரோட்ல உட்கார்ந்து பிச்சையா எடுக்க முடியும்? டென்ஷன் ஆகிட்டாரு போல... அண்ணாமலை ஆவேச பதில்...!
இதனால், மாணவர்களின் பல்கலைக்கழக தேர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், உடனடியாக, அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக்கழக நிர்வாகமும், திமுக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல்... தமிழ்நாட்டுக்கு தான் அதிக ஆபத்து! அண்ணாமலை கடும் எச்சரிக்கை...!