ரோட்ல உட்கார்ந்து பிச்சையா எடுக்க முடியும்? டென்ஷன் ஆகிட்டாரு போல... அண்ணாமலை ஆவேச பதில்...!
தனது ரியல் எஸ்டேட் தொடர்பான கேள்விக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பதிலளித்தார்.
விவசாய நிலத்தை வாங்கியது குறித்து வதந்தி பரவிய நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தார். கடந்த ஜூலை 12, 2025 அன்று, விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான் என்றும் நிலத்தை, நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியதாக தெரிவித்தார். கடந்த இரண்டு மாதங்களாக, தனதுவங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருவதாக கூறி இருந்தார்.
நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என்று கூறுபவர்கள், ஒரு அசையாச் சொத்தை, பவர் ஆஃப் அட்டர்னி மூலம் வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜூலை 10, 2025 காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் எனது மனைவி அகிலாவுக்கு, தனது பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டது என்றும் கூறினார்.
இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ. 40,59,220 செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்து உள்ளதாகவும், அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக, இவை அனைத்தையும் பிரதிபலிக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல்... தமிழ்நாட்டுக்கு தான் அதிக ஆபத்து! அண்ணாமலை கடும் எச்சரிக்கை...!
இத்தனை ஆண்டுகளாக, எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருவதாகவும் சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்திற்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் என் மரியாதை கலந்த நன்றிகள் என்றும் குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு, இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை கொடுப்பதாகவும் பதில் கொடுத்திருந்தார். இந்த நிலையில் அவரது ரியல் எஸ்டேட் தொழில் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அண்ணாமலை, மிகவும் காட்டமாக பதில் அளித்தார். தான் என்ன சாராய கம்பெனியா நடத்துகிறேன் என்று கேட்டார். தொழில் செய்வதால் என்ன தவறு என்று கேட்ட அண்ணாமலை, நான் எப்படி சாப்பிடுவேன் என்றும் என் பிள்ளைகளுக்கு எப்படி பீஸ் கட்டுவேன் எனவும் கேள்வி எழுப்பினார். அதற்கு, தான் ரோட்டில் உட்கார்ந்து பிச்சையா எடுக்க முடியும் என்றும் அண்ணாமலை ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: #Breaking காவலர் குடியிருப்பில் படுகொலை... திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய அண்ணாமலை!