எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு டூ ஜனநாயக லீக் வரை... மதுரை மண்ணில் அண்ணாமலை கொடுத்த பரபரப்பு விளக்கம்...!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக பணிகள் முடித்து அக்டோபர் நவம்பர் மாதத்தில் திறக்கப்படும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தகவல்
மதுரை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்தித்த அண்ணாமலை, மதுரை தெற்கு தொகுதியில் நிதின் நபின் அவர்கள் மதுரை தெற்கு தொகுதியில் ராம சீனிவாசன் அவர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார் நானும் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர் பிடிஆர், அமைச்சர் மூர்த்தியும் பொய் பேசுகிறார்கள். அதற்காக அவர்கள் மதுரை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் கட்டு மட்டும் போவதற்கான பேருந்து பாதை அமைக்க தான் கேட்டிருக்கிறீர்கள் இன்று இந்த திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
நீங்கள் உண்மையிலேயே மெட்ரோ ரயில் திட்டம் கேட்டீர்கள் என்றால் மத்திய அரசுக்கு நீங்கள் அனுப்பிய கடிதத்தை வெளியிடுங்கள். நாங்கள் மதுரைக்கு மெட்ரோ கொடுப்பது தடுத்து விட்டதாக அமைச்சர்கள் மதுரையில் பொய் சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: நாங்க ஆரம்பிச்சா தாங்கமாட்டீங்க... அண்ணாமலைக்கு சவால்விட்ட திமுக வேட்பாளர்...!
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஏன் நான்காம் தேதிக்கு மேல் புதிதாக திட்ட அறிக்கை மக்கள் தொகையை குறிப்பிட்டு மெட்ரோ ரயில் திட்டத்தை பெற்று தருவோம். அக்டோபர் நவம்பர் மாதத்திற்குள் எய்ம்ஸ் பணிகள் நிறைவடைந்து திறக்கப்படும்.
மெட்ரோ திட்டத்தில் மக்கள் எவ்வளவு பேர் பயனடைவார்கள் எனக்கு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த கடிதத்தை மக்கள் மன்றத்தில் வையுங்கள். உள்ளூர் சந்தையில் விலை போகாத திராவிட மாடல் அரசு வெளியூர் சந்தையில் எப்படி செல்லும். வாய் இருப்பதால் திமுக நண்பர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் நெல்லுக்கான ஊக்கத் தொகையை நிறுத்துங்கள் என எந்த இடத்திலும் சொல்லவில்லை. மத்திய நிதி அமைச்சர் சொல்லியிருக்கிறார். தேவையில்லாமல் முதலமைச்சர் பிரச்சனை செய்யாமல் பிரச்சாரத்தை செய்ய வேண்டும். திமுகவுக்கு எதிரான வாக்கும் நமக்கு வேண்டும் நமது வாக்கும் வேண்டும். பரந்தாமன் உள்ளிட்டோர் திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார்கள்பாலியல் குற்றம், திமுக ஊழல், வேங்கை வேயில் பற்றி பேசுவதில்லை.
மாணிக்கம் தாகூரை விடுங்கள் பாவம். வீட்டில் உட்கார்ந்து கொண்டு என் மீது கல்லை எரிந்து கொண்டிருக்கிறார். மாணிக்கம் தாகூர் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்?. வடக்கு தொகுதியை வாங்கியே தீர்வோம் என கூறினார்கள். தமிழகத்தில் இரண்டு முனை களமாக மாறி வருகிறது.முக மிகப்பெரிய வேலையை செய்து வருகிறார்கள் - அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது.
கோபாலபுரத்தில் உள்ள ஊழல் வாதிகளுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் இடையிலான தேர்தல் தான் இது. டெல்லி தமிழ்நாடு எல்லாம் கிடையாது.. நான்காம் தேதி புரிந்து கொள்வார். காரைக்குடியில் விஜய் பேச முடியவில்லை என சொன்னார்கள். ஏழு நிமிடம் தாமதமாக வந்ததாக கூறினார்கள். பேசுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். இந்த முறை இளைஞர்கள் தீர்மானிக்கக்கூடிய தேர்தல். தமிழ்நாடு வளர்ச்சியை தற்போது பார்க்கிறார்கள்.
இளைஞர்கள் கையில் உலகம் வந்துவிட்டது வாக்குகளை யோசித்து போடுங்கள். தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனை நடைபெற்று வருகிறது ஐபிஎல் பார்ப்பது தான் முதலமைச்சருக்கு வேலையா என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, முதல்வர் தூங்கி எழுந்தால் டெல்லி vs தமிழ்நாடு என கூறிக் கொண்டிருக்கிறார். டெல்லி Vs தமிழ்நாடு எல்லாம் கிடையாது என்பது நான்காம் தேதி புரிந்துவிடும்.
புதுச்சேரியில் கூட்டணி கட்சியினுடைய ஒற்றுமை இல்லை. கை சின்னமும், உதயசூரியனும், பானையும் ஒரே இடத்தில் நிற்கிறது. அங்கு இந்தி கூட்டணி படுதோல்வி அடையும். கேரளாவில் இந்த முறை தேர்தல் திருப்புமுனையாக பாஜகவிற்கு அமையும். அமித்ஷா தேர்தல் பரப்புரைக்கு வருகிறார் அதை உறுதிப்படுத்தி விட்டார்கள். ஜனநாயகம் படம் இணையத்தில் லீக்? குறித்த கேள்விக்கு, படத்தை பார்க்க வேண்டுமென்றால் தியேட்டரில் போய் பார்ப்போம் அல்லது ஓடிட்டியில் பார்ப்போம். முறையாக பார்ப்போம் செலுத்த வேண்டிய பணத்தை முறையாக கொண்டு போய் இருக்கட்டும். எங்கிருந்து லீக் ஆனதோ கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..! பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு பெயர் வைத்த அண்ணாமலை..!!