×
 

50 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போச்சு..! தண்ணீருக்கே தவிக்கும் நிலை வரும்..! அண்ணாமலை எச்சரிக்கை..!!

நீர் நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலை குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சுற்றுச்சூழல் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார் வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை. அண்மையில் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் தமிழகத்தின் நீர்வளம், பசுமைப் போர்வை மற்றும் எதிர்கால நீர் பற்றாக்குறை பற்றிய முக்கியமான விஷயங்களை சுட்டிக்காட்டினார். இந்தியாவில் தமிழகத்தில்தான் நகரங்களில் அதிக மக்கள் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் சுட்டிக்காட்டினார்.

கடந்த 1970 முதல் 2015 வரை 45 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை வெறும் 0.2 டிகிரி அதிகரித்ததாகவும், ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் மட்டும் 0.35 டிகிரி அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது சுற்றுச்சூழல் சமநிலை வேகமாக மாறி வருவதைக் காட்டுகிறது என்றார்.

சென்னை நகரத்தின் நிலைமையை குறிப்பிட்டுப் பேசிய அண்ணாமலை, அங்கு 67 சதவீத இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், வெறும் 10 சதவீத இடத்தில்தான் பசுமை இருக்கிறது என்றும் கூறினார். இதனால் ஏசி இல்லாமல் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.தமிழகத்தின் நீர்நிலைகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்ட அண்ணாமலை, மாநிலத்தில் உள்ள 1.06 லட்சம் நீர்நிலைகளில் 50,197 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாகக் கூறினார். ஆறுகள் மாசுபட்டுள்ளன. காடுகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதையும் படிங்க: நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

தென் மாநிலங்களிலேயே அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவது தமிழகம்தான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்த நிலை தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டில் கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என்று எச்சரித்தார். எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தினார்.

இந்தப் பின்னணியில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மரக்கன்று நடுதல், நீர்நிலைகளை சுத்தம் செய்தல் போன்ற சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளை வீ த லீடர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை அழைப்பு விடுத்தார். இந்தப் பணிகள் மூலம் தமிழகத்தின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை ஆதரவாளர்கள்! நயினார் முக்கிய ஆலோசனை! அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share