×
 

புழல் சிறையிலிருந்த ஞானசேகரனுக்கு நள்ளிரவில் திடீர் அதிர்ச்சி... அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆச்சு?

ஆயுள் தண்டனை கைதி ஞானசேகரன் நள்ளிரவில் வலிப்பு நோய் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி.

புழல் சிறையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்  அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி ஞானசேகரன் நள்ளிரவில் வலிப்பு நோய் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

நேற்று நள்ளிரவு ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு வந்ததால், உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறை கைதிகளுக்கான பிரத்யேக வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு கைதி வலிப்பு நோய் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: யார் அந்த SIR? நீங்காத மர்மம்... சும்மா விட மாட்டோம்..! அதிமுக சூளுரை..!!

வழக்கின் பின்னணி:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு பயின்று வந்த மாணவி ஒருவரை 2024 டிச.23-ம் தேதி இரவு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து அதை தனது மொபைலில் வீடியோ எடுத்ததாக கோட்டூர்புரம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டூர்புரம் போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு, கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் (37) என்பவரை டிச.24-ம் தேதி கைது செய்தனர். 

இதற்கிடையே ஞானசேகரனை குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, மே 2025ம் ஆண்டு 28-ம் தேதியன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 பிரிவுகளின் கீழ் அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. 

இதனையடுத்து 2025, ஜூன் 2ம் தேதி அன்று, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டார். மேலும், ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எவ்வித தண்டனைக் குறைப்புமின்றி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென்றும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் படிங்க: அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share