×
 

ஒரு எம்.பி பேசுற பேச்சா இது? விண்வெளிக்கு முதல்ல போனது அனுமனா! விளாசிய கனிமொழி..!

விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என மாணவர்கள் மத்தியில் பேசிய பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூருக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

இமாசலப் பிரதேசத்தில் உள்ள PM SHRI பள்ளி ஒன்றில் விண்வெளி தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தது யார் என கேள்வி எழுப்பினார்.

மாணவர்கள் அனைவரும் நீல் ஆம்ஸ்ட்ராங் என ஒன்றாக இணைந்து பதிலளித்தனர். அதற்கு எம். பி. தனக்கு தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன்தான் என பேசியுள்ளார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாதவரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டிய வழியில் நாம் இருப்பதாக தெரிவித்தார்.

பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்க வேண்டும் என்றும் l அந்தத் திசையில் பார்த்தால் நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என்றும் கூறினார். விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என மாணவர்கள் மத்தியில் பேசிய பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூருக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர், நிலவில் முதன்முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என்று பள்ளி மாணவர்களிடம் மத்தியில் பேசுவது மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: MP கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிப்பு... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது!

அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல என்றும் வகுப்பறைகளில் மாணவர்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் இணைந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிக்கும் செயல் என்று கூறினார். இந்தியாவின் எதிர்காலம் என்பது உண்மையை கட்டுக்கதையுடன் குழப்பிக் கொள்ளாமல், ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளதாகவும் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கேள்வி கேட்டாலே தேச விரோதி முத்திரை குத்துவீங்களா? கனிமொழி சரமாரி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share