#BREAKING: MP கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிப்பு... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது!
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா என்பது தமிழ்நாட்டின் அரசியலில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது கட்சியின் நிறுவன நாளையும், அதன் முன்னோடி தலைவர்களான பெரியார் ஈ.வி.ராமசாமி மற்றும் சி.என்.அண்ணாதுரையின் பிறந்தநாள்களையும் ஒருங்கிணைத்து கொண்டாடப்படும் ஒரு பிரமாண்டமான விழா. இந்த விழா, திமுகவின் 75-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் பவள விழாவுடன் இணைந்து மேலும் சிறப்பு பெறுகிறது. செப்டம்பர் 17ஆம் தேதி கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த நிலையில், முப்பெரும் விழாவை ஒட்டி விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், திமுக துணை பொதுச்செயலாளரும் கே நாடாளுமன்ற உறுப்பினர் தலைவருமான கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழு முன்னாள் உறுப்பினரும் பாளையங்கோட்டை நகர மன்ற தலைவருமான சுப சீதாராமனுக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டு கண்டவரும் அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும் அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா. ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருதும், கழக மூத்த முன்னோடியும் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், குளித்தலை ஒன்றிய குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேள்வி கேட்டாலே தேச விரோதி முத்திரை குத்துவீங்களா? கனிமொழி சரமாரி கேள்வி..!
கழக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவரும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் கொரடாவுமான மருதூர் ராமலிங்கத்திற்கு பேராசிரியர் விருது அறிவிக்கப்பட்டது.
மேலும், ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா. பழனிசாமிக்கு மு. க ஸ்டாலின் விருது வழங்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது.
இதையும் படிங்க: திருமாவின் அரசியல் வாழ்வு எப்படிப்பட்டது தெரியுமா? கமல்ஹாசன் நெகிழ்ச்சி