முதல்வரின் அநாகரிக விமர்சனம்..! கண்டிக்கத் தயங்குவது ஏன்..? அப்பாவு எதிர்ப்பு..!
முதல்வர் விஜயின் அநாகரீக விமர்சனத்தை ஏன் கண்டிக்கவில்லை என்று அப்பாவு கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டே தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை தாருங்கள் என்று கேட்கக்கூடிய வலிமையான தலைவர் மு.க.ஸ்டாலின் என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நாட்டை பிளவுபடுத்தும் சி.ஐ.ஏ சட்டம், விவசாயிகளை நசுக்கும் வேளாண் சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக மத்திய அரசுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து அதனை ஒன்றிய அரசால் திரும்ப பெற வைத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும் கூறினார்.
ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி தொகுதி மறு வரை மசோதாவை குறுக்கு வழியில் நிறைவேற்ற முனைந்த போது நாடாளுமன்றதிலே அம்மசோதாவை தோற்கடித்து காட்டிய செயல்வீரர் மு.க.ஸ்டாலின் என புகழாரம் சூட்டியுள்ளார். இன்றும் சிறுபான்மையின மக்களை ஒழித்துக்கட்ட ஒன்றிய அரசால் கொண்டு வர இருக்கின்ற FCRA சட்டத்தை இந்திய அளவில் துணிந்து எதிர்கின்ற ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும் கூறினார்.
1962-ல் சட்டமன்ற தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணா வெற்றி வாய்ப்பை இழந்தார். 1967-ல் விருதுநகரில் காமராஜர் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம்.. ஆனாலும் கொள்கை உறுதி, இந்திய ஒற்றுமைக்கு அவர் அளிக்கும் பங்களிப்பு, எதற்கும் அஞ்சாத இந்தியாவே திரும்பி பார்க்கின்ற ஆளுமை மிக்க தலைவராக விளங்குவார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய புண்ணியவான் நீங்க தான் விஜய்..! விளாசிய அப்பாவு..!!
அப்படிப்பட்ட தலைவரை அநாகரிகமாக சட்டமன்றத்தில் பேசிய இன்றைய முதல்வரை சட்டமன்றத்தில் இருந்த ஆளும் கட்சி அல்லாத பிறகட்சிகள் தட்டிக் கேட்க தயங்கியது ஏன்? அச்சப்பட்டு விட்டார்களா? அல்லது சட்டமன்றத்தில் நடந்ததை சினிமா காட்சிகள் என்று கடந்து சென்றுவிட்டார்களா? அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து இன்றைய முதல்வரின் அநாகரீக விமர்சனத்தை நேரடியாக கண்டிக்க தயங்குவது ஏன்? சரமாரி கேள்விகளை அப்பாவு முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!