பாஜக வழியில் தவெக..! மறுக்க முடியுமா CM சார்.? வம்பிழுத்த அப்பாவு..!
முதல்வர் விஜயின் ஆந்திரா பயணத்தை குறிப்பிட்டு அப்பாவு விமர்சனம் செய்து உள்ளார்.
முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமிழக அரசியல் குறித்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா தொடங்கி மேற்குவங்கம் வரை பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகளை கபளீகரம் செய்து ஆட்சியைப் பிடித்த பாஜக, தமிழகத்திலும் விஜயை வளைத்து கட்சி தொடங்க வைத்து ஆட்சியைத் தக்கவைக்க தமிழக அரசியல் கட்சிகளை குதிரைபேரம் மூலம் விலைக்கு வாங்கி பாஜக வழியில் ஆட்சி நடத்தி வருவதை மறுக்க முடியுமா என்று அவர் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி இந்தியாவில் யாரும் வாங்காத அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி, கட்சி நிதி மற்றும் தனிப்பட்ட நிதி என்று வசூலித்த பல ஆயிரம் கோடி ரூபாயை ஆந்திர ரெட்டி கும்பல் மூலம் லண்டனில் பதுக்கி, அதனைத் தந்திரமாக தமிழ்நாட்டு முதலீடு என்று வெள்ளைப் பணமாக்கியதற்கு உதவி செய்த ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து நன்றிக்கடன் செலுத்தச் சென்றீர்களா என்றும் அவர் கேட்டுள்ளார்.
எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு கலைஞரால் நிறைவேற்றப்பட்ட தெலுங்கு கங்கை திட்டத்தில் தடையின்றி வரும் தண்ணீர் குறித்து சந்திரபாபு நாயுடுவுடன் பேசினேன் என்று சொல்லும் விஜய் அவர்களிடம், தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரைத் தடுத்து நிறுத்த பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டிவருவதை கைவிட வேண்டும் என்று கேட்டீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!
குடிநீர் வினியோகம், ஓட்டுனர்-நடத்துனர் தேர்வு, மின்சார கணக்கெடுப்பு ஆகியவற்றை தனியாருக்குத் தாரை வார்த்தது போல் டாஸ்மாக் நிறுவனத்தை ஆந்திர ரெட்டி கும்பல் மூலம் ஆந்திர சாராய ஆலை அதிபரிடம் விற்பனை செய்வதற்காகத்தான் ஆந்திரா சென்றதாக வரும் செய்தி உண்மையா என்றும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு முதலமைச்சரிடம் கேள்வி கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: டிபன் பாக்ஸ் நிறைய பணம்.. இதான் தூய ஆட்சியா CM சார்..? அப்பாவு விளாசல்..!!