அமித்ஷா பின்னணியில் விஜய்...கட்சி ஆரம்பிக்க சொன்னதே BJP தான்... அப்பாவு பரபரப்பு பேட்டி...!
ஒன்றிய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்ப்பதாக சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டினார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை 2024 பிப்ரவரி மாதம் தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களிடையே தனது கொள்கைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு மாநாடுகளையும், சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறது. முதலில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திமுக அரசையும் பாஜகவின் விமர்சித்து பேசி இருந்தார். பாஜகவை கொள்கை எதிரி என கூறும் விஜய் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
விஜயின் பாஜக விமர்சனங்களின் முக்கிய அம்சங்களில் ஒன்று, மத்திய அரசின் ஒரு நாடு, ஒரு தேர்தல் திட்டம். 2025 செப்டம்பர் 13-ம் தேதி திருச்சி, அரியலூர் போன்ற இடங்களில் நடந்த ரேலிகளில், விஜய் இதை ஜனநாயக கொலை என்று அழைத்தார். இந்தத் திட்டம் மாநில அரசுகளை கலைத்து, மத்தியில் பாஜக ஆட்சி நீடிக்க உதவும் என்று அவர் குற்றம் சாட்டினார். விஜயின் இந்த விமர்சனங்கள், பாஜகவிடமிருந்து கடுமையான பதிலைப் பெற்றுள்ளன. பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, விஜயை வார இறுதியில் மட்டும் அரசியல் செய்பவர் என்று கிண்டலடித்தார். மத்திய இணை அமைச்சர் எல். முருகன், விஜய் RSS கோட்பாடுகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம், விஜயை குழந்தை அரசியல்வாதி என்று அழைத்து, அவர் DMK-வின் விளம்பரத்தை பரப்புவதாகக் கூறினார்.
இதையும் படிங்க: இனி இந்தியா இன்னும் வேகமா முன்னேறும்!! ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்! அமித் ஷா சொல்லும் பாயிண்ட்!
இதனிடையே, நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஒன்றிய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார். பின்புலத்தில் மோடி, அமித்ஷா இருக்கும் தைரியத்தில் அரசியல் அடிச்சுவடே தெரியாமல் அகந்தையோடு விஜய் பேசுவதாகவும் கூறினார். கண்ணியத்துடன் பேசுவது விஜய்க்கு நல்லது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் TTV, OPS...! என்டிஏ கூட்டணி குறித்து இபிஎஸ் உடன் பாஜக தலைகள் தீவிர ஆலோசனை...