×
 

திமுகவை வேரோடு அகற்றணுமா? ஸ்டாலின் எப்படிப்பட்டவர் தெரியுமா! மனம் திறந்த அப்பாவு..!

அனைவருக்கும் உதவும் நிழலும், கனியும் தரும் மரமாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக சபாநாயகர் அப்பாவு புகழாரம் சூட்டினார்.

காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளில் இருந்து வெளியேறி, திமுகவில் இணைந்த பிறகு, அப்பாவு கட்சியின் முக்கிய உறுப்பினராக அப்பாவு உருவெடுத்தார். 2006 மற்றும் 2021 ஆம் ஆண்டு தேர்தல்களில் திமுக வேட்பாளராக ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2021ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகள் இல்லாமல் 16வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

நெல்லையின் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் புகழ்ந்து பேசினார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் 921 பயனாளிகளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணிக்கு தேர்வானவர்களுக்கு சபாநாயகரும், அமைச்சரும் அதற்கான பணியாணையை வழங்கினர். தொடர்ந்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 4428 பயனாளிகளுக்கு மறுவரை செய்யப்பட்ட நிலப்பட்டா உள்பட 2 கோடியே 74 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதையும் படிங்க: “சிம்பிளி வேஸ்ட்...” தவெக மாநாட்டை ஒத்த வார்த்தையில் டேமேஜ் செய்த அப்பாவு...!

அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, திமுக அரசை சிலர் வேரோடு அகற்ற வேண்டும் என்கிறார்கள்., தமிழக முதல்வர் பயனுள்ள மரமாக, தமிழகத்தின் பலமாக, அனைவருக்கும் நிழலும், கனியும் தரும் மரமாக உள்ளார் என கூறினார். அவரின் நிழலை கூட தொட்டுப்பார்க்க தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொட்டி கிடக்கும் கல்லு கோபுரம் ஆகாது! விஜய்க்கு தலைக்கால் புரியல... Ex. அமைச்சர் செம்மலை விளாசல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share