கொட்டி கிடக்கும் கல்லு கோபுரம் ஆகாது! விஜய்க்கு தலைக்கால் புரியல... Ex. அமைச்சர் செம்மலை விளாசல்..!
கூட்டத்தைப் பார்த்து தலைகால் புரியாமல் விஜய் பேசுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார் விஜய். அவரது பேச்சு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. முன்னாள் அமைச்சர் செம்மலை, விஜய்யின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வெளிநாட்டில் வாங்கிய சொகுசு காருக்கு வரி செலுத்தாமல், அரசுக்கு வரி ஏய்ப்பு செய்தவர் எல்லாம் ஊழலற்ற ஆட்சியை பற்றி பேசுவது எப்படி நம்ப முடியும் என கேள்வி எழுப்பினார். அவருடைய பல திரைப்படங்கள் தோல்வி அடைந்ததைப் போல தேர்தலுக்குப் பிறகு அவருடைய கட்சியும் ஃபிளாப்பாகும் என அதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான செம்மலை விமர்சித்துள்ளார்.
கொட்டிக் கிடக்கும் செங்கல்கள் எல்லாம் கோபுரமாகிவிடாது, விஜய் நான் தான், நான் தான் என குழந்தையை போல பெருமை பேசிக்கொள்கிறார் எனவும் தெரிவித்தார். நடிகர் விஜய் தற்போது தான் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்றும் தற்போது அவர் தவழும் குழந்தை தான்., எனவே அவர் நடைப்பழக யாருடைய கையை யாவது பிடித்து தான் பழக முடியும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநாட்டில் பேச வரைமுறை இருக்கு! விஜய் ஏதோ அவதார புருஷரை போல.. விளாசிய மாஜி அமைச்சர்..!!
அதற்குள் நான் தான் தலைவர், அனைத்தும் நான் தான் என்று பெருமை பேசிக்கொள்கிறார் என்றும் கொட்டிக்கிடக்கும் செங்கற்கள் கோபுரம் ஆகிவிடாது , அது போல கூடும் கூட்டத்தை பார்த்து அது வாக்குகளாக மாறிவிடும் என்று அவர் எண்ணி விடக்கூடாது என்றார். ஏற்கனவே சில தலைவர்களை தன் வழிகாட்டியாக வைத்து விஜய் பேசியதாகவும், அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை வழிகாட்டிகளாக வைத்து புதிதாக பேசி வருகிறார் என்றும் கூறிய செம்மலை, அண்ணா, எம்ஜிஆர் தேசிய தலைவர்கள், அவர்களை யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம். அதற்காக அவர் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார். அதிமுக தொண்டர்களை ஈர்ப்பதற்காக அவர் இவ்வாறு பேசி வரலாம் , ஆனால் அவருடைய வலையில் ஒரு அதிமுக தொண்டன் கூட சிக்க மாட்டார் என்றார்.
நடிகர் விஜய் முதிர்ச்சி இல்லாமல் பேசி வருகிறார். அவர் பேச்சில் பக்குவம் இல்லை, ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்று விஜய் பேசுகிறார் என அவர் கூறினார். நடிகர் விஜய் இனியாவது தன்னை பக்குவப்படுத்திக் கொண்டால் நல்லது , இல்லையென்றால் அவருடைய பல படங்கள் தோல்வியை தழுவியதைப் போல அரசியலிலும் தோல்வியை தழுவுவார் என்றார்.
இதையும் படிங்க: STALIN UNCLE… Its Wrong uncle! மதுரை மாநாட்டில் முதல்வரை விளாசிய விஜய்..!