×
 

உலகப் புயலுடன் கைகோர்த்த.. இசை புயல் ரகுமான்..! குலுங்கியது சென்னை

உலகப் புயலுடன் இசை புயல்!!

சென்னையின் பிரதான பகுதியான நந்தனம் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து போனது என்று சொல்லும் அளவிற்கு உலக அளவில் புகழ்பெற்ற பாடகரான எட் ஷீரனின் கச்சேரி நடைபெற்றது. Shape of You பாடல் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற விஐபி யாக மாறியவர்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த பாடகர் ஹெட்சீரன் 

இவரது இசைக்கச்சேரி எனப்படும் கன்சர்ட் சென்னை நந்தனம் ஐ எம் சி ஏ மைதானம் பகுதியில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் சென்னை பெங்களூரு கொச்சி ஹைதராபாத் தில்லி மும்பை உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து பகுதியைச் சேர்ந்த இசை ஆர்வலர்கள் இளைஞர்கள் மாணவர்கள் என பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் காரணமாக மாலை 3 மணி முதல் இரவு 12 மணி வரை சென்னை நந்தனம் பகுதியே ஸ்தம்பித்து போனது. உலகப் புகழ்பெற்ற பாடகரான எட் சிரன் பாடல் மட்டுமின்றி சிறந்த பாடல் ஆசிரியராகவும் இருக்கிறார் என்பது சுவாரஸ்யமான விஷயமாகும். சேப் ஆப் யு..பர்ஃபெக்ட் திங்கிங்.. அவுட் லவ்ட் உள்ளிட்ட இவரது ஹிட் பாடல்கள் உலகையே ஒரு கலக்கு கலக்கியது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: சிவகங்கையில் பெண் காவல் உதவியாளர் மீது தாக்குதல்.. முதலமைச்சர் வெட்கி தலை குனிய வேண்டும்... டிடிவி தினகரன் சாடல்!

33 வயதான எட் ஷீரன் சிறு வயதில் இருந்தே இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார் பாடல்களையும் எழுதியும் வருகிறார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பெஸ்ட் சோலோ சிங்கர் என்ற விருதையும் இவர் பெற்றிருக்கிறார். உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட எட் ஷீரன் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது என்று அறிவிப்பு வந்தவுடன் அவரது ரசிகர்கள் இசை நிகழ்ச்சியை காண இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்து குவிந்தனர்.

எட் ஷீரன் இன் இந்திய சுற்றுப்பயணத்தில் ஹைதராபாத் டெல்லி பூனே, சென்னை, பெங்களூரு, ஷில்லாங் ஆகிய நகரங்களில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னையில் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரு டிக்கெட்டின் விலை 3 ஆயிரத்தில் ஆரம்பித்து 24 ஆயிரம் வரை விற்றது. எட் ஷீரனின் இந்த இசை நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமானும் கலந்துகொண்டு பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

இதையும் படிங்க: காட்டுப்பன்றி என நினைத்து நண்பனை சுட்டுக்கொன்ற கிராமவாசிகள்..! காட்டிலேயே உடலை மறைத்த கொடூரம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share