திருட்டுத் தேர்தல் ஆணையம்… மோடியும், அமித் ஷாவும் பக்கா திருடர்கள்…! ஆ.ராசா கடும் விமர்சனம்..!
தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் மிக தீவிரமாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசினார். அப்போது, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதையும் படிங்க: மைத்ரேயனுக்கு அடிச்சுது ஜாக்பாட்..!! கட்சி தாவிய 3 மாசத்துல இப்படி ஒரு பதவியா..!!
வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த பணி மூலமாக தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது என ஆ ராசா விமர்சனம் செய்துள்ளார். திருடர்களிடமிருந்து தேர்தல் ஆணையத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டியுள்ளது என்றும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கடுமையாக விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மேலும், எஸ்.ஐ.ஆர் திட்டத்தை அமல்படுத்திய தேர்தல் ஆணையம் திருடன் என்றால் மோடியும் அமித் ஷாவும் பெரும் திருடர்கள் என்றும் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் திருடனாக இருப்பதால்தான் திமுக கழகத்தில் இருப்பதாக விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் மூழ்கிய தலைநகர் 'சென்னை'..!! திமுகவின் 'மழைக்கு தயார்' என்ன ஆச்சு..?? விளாசும் மக்கள்..!!