சட்டமன்றத் தேர்தல்..! ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகள்..! தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!
தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 14.59 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்களாக இருக்கின்றனர் என்ற அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் 1.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் இதுவரை பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை என்ன 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 2.77 கோடி ஆண் வாக்காளர்களும், 2.89 கோடி பெண் வாக்காளர்கள் உட்பட 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் அரசு பணியாளர்கள் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!
பிரச்சனைக்குரியதாக கண்டறியப்பட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் காவல்துறையினர் மட்டுமின்றி 300 கம்பெனி துணை ராணுவ படையினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் 5,949 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்..! வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரம்..!!