விறுவிறு தேர்தல்..! வாக்குப்பதிவுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரம்..!!
வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தத் தேர்தல் ஒரே கட்டமாக முழு மாநிலத்திலும் நடைபெற உள்ளது. 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏராளமான வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் தாம் அளித்த வாக்கை உறுதிப்படுத்தும் கருவிகள் ஆகியவை தயார் செய்யப்பட்டு, பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன.
தேர்தல் ஆணையம் (ECI) வழிகாட்டுதலின்படி, முதலில் EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் மாவட்ட அளவில் கணினி முறையில் சமவாய்ப்பு செய்யப்பட்டன. மார்ச் மாத இறுதியில், மார்ச் 23 முதல் 25 வரை பல மாவட்டங்களில் இந்த முதல் கட்ட சமவாய்ப்பு நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சுமார் 90,000 கட்டுப்பாட்டு அலகுகள், 90,000 வாக்குப் பதிவு அலகுகள் மற்றும் 97,500 VVPAT கருவிகள் இந்தத் தேர்தலுக்காக தயாராக உள்ளன. கூடுதலாக, அவசர தேவைக்கு 20 சதவீதம் உதிரி இயந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வந்தாச்சு தேர்தல் திருவிழா... EVM இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..!!
பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகளில் 3 லட்சத்து 40 ஆயிரம் அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் உபகரணங்கள் அனுப்பும்படி இன்று நடைபெறுகிறது. வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். EVM, VVPAT இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: ஏப்ரல் 16 முதல் தொடக்கம் என அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!