கோயில் திருப்பணிகளில் அர்ச்சனா கல்பாத்தி..! நியமனத்தின் பின்னணி இதுதானா..? அமைச்சர் ரமேஷ் விளக்கம்..!
அர்ச்சனா கல்பாத்திக்கு அறங்காவலர் குழுவில் இடம் பெற வாய்ப்பு கொடுக்கப்பட்டது ஏன் என அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சமீபத்தில் ஆண்டு வருமானம் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைக்கு அப்பாற்பட்ட அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியுள்ள விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் மாநில அளவிலான குழுவை மறுசீரமைத்துள்ளது. இந்த ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
இவரது நியமனம் வெளியானவுடன் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கேள்விகள் எழுந்தன. குறிப்பாக நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) போன்ற படங்களின் தயாரிப்பாளராக அறியப்படும் இவரை கோயில் நிர்வாகம் தொடர்பான முக்கிய குழுவில் சேர்த்தது ஏன் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். அர்ச்சனா கல்பாத்தியை வெறும் திரைப்படத் தயாரிப்பாளராக மட்டும் பார்த்து விமர்சனம் செய்வது சரியல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார். ஒருவருக்கு இரண்டு முகங்கள் இருக்கலாம் என்று கூறிய அமைச்சர், அர்ச்சனா கல்பாத்தி ஆன்மிகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருபவர் என்பதை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: "திமுகவின் ரவுடியிசம்"..! பொதுமக்களை தாக்குவதா.? கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்..!!
பத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு பல்வேறு திருப்பணிகளை இவர் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இவரது மாமனார் கோடிக்கணக்கில் கோயில்களுக்கு திருப்பணிகளை மேற்கொண்டு வருபவர் என்றும் குறிப்பிட்டார். இவ்வாறு குடும்ப ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் கோயில் சேவைகளில் ஈடுபட்டு வரும் பின்னணி இருப்பதால் இவரை இந்த குழுவில் இணைத்திருப்பதாக அமைச்சர் விளக்கினார்.
இதையும் படிங்க: மீனாட்சியம்மன் கோவில் முறைகேடு விவகாரம்..! 19 பேர் மீது FIR..! அறப்போர் இயக்கத்துக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி..!