×
 

மீனாட்சியம்மன் கோவில் முறைகேடு விவகாரம்..! 19 பேர் மீது FIR..! அறப்போர் இயக்கத்துக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி..!

மீனாட்சியம்மன் கோவில் நில முறைகேடு விவகாரத்தை தங்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற புனிதத் தலங்களில் ஒன்று. இந்தக் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களைப் பாதுகாப்பதும், கோவில் நிர்வாகத்தை மேம்படுத்துவதும் இந்து சமய அறநிலையத் துறையின் முக்கியப் பொறுப்பு. இத்தகைய பின்னணியில், கோவிலின் பல நூற்றாண்டு பழமையான அறக்கட்டளை சொத்துக்களில் ஒன்று முறைகேடாக தனியாருக்கு மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பிலான 1.79 ஏக்கர் நிலம் தொடர்பான இந்த முறைகேடு தொடர்பாக 19 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. 

இந்த விவகாரத்தின் தொடக்கம் 1930-ல் நடந்த ஒரு அறக்கட்டளையுடன் இணைந்துள்ளது. புதுக்கோட்டை ராஜகுமாரர் தக்ஷிணாமூர்த்தி துரைராஜா துரைராணி டிரஸ்ட் என்ற அந்த அறக்கட்டளை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோயில் ஆகியவற்றின் சேவைகளுக்காக உருவாக்கப்பட்டது. இந்த டிரஸ்ட்டுக்கு சொந்தமான மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள அசோக விலாஸ் பங்களா மற்றும் அதை ஒட்டிய தோட்டம் ஆகியவை முக்கிய சொத்துகள். இந்த சொத்துக்களை வாடகைக்கு விடலாம் என்பதே விருப்பத்தின் விதி; அடகு வைக்கவோ, விற்கவோ அனுமதி இல்லை. 

இந்த நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறக்கட்டளையின் 60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து முறைகேடு விவகாரத்தில் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோவில் இணை ஆணையரின் புகாரின் பேரில் 19 பேர் மீது மத்திய குற்ற பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான 1.79 ஏக்கர் நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றி மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்திருக்கிறது.

இதையும் படிங்க: பழனி கோயில் நில மோசடி... தீயாய் பரவிய வதந்தியால் டென்ஷன் ஆன அமைச்சர் ரமேஷ்... அறநிலையத்துறை எச்சரிக்கை...!

இந்த விவகாரத்தை அறப்போர் இயக்கத்தினர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை வெளிப்படுத்தி இருப்பதாக அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டார். இந்த பிரச்சனையை தங்கள் பார்வைக்கு கொண்டு வந்த அறப்போர் இயக்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். ஆதரங்களோடு இதுபோன்ற முறைகேடுகள் குறித்த புகார்கள் அளித்தால் அதன் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

இதையும் படிங்க: கோவில்களில் முறைகேடா..? "மெயில் போடுங்க"..! அமைச்சர் ரமேஷ் அறிவுரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share