×
 

ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள்..! பெரம்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..! கண்காணிப்பு தீவிரம்..!

ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் 1972 ஜனவரி 31-ல் பெரம்பூரிலேயே பிறந்தவர். அங்கேயே வளர்ந்து, அங்கேயே அரசியல் செய்து, அங்கேயே கட்சியை வளர்த்தவர். ஆனால் கடந்த ஆண்டு ஜூலை 5-ல், அதாவது ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அன்று, அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தமிழக அரசியலை அதிர வைத்தது.

பட்டியலின மக்களுக்காக தீவிரமாகப் போராடியவர், புதிய பௌத்த இயக்கத்தை தொடங்க முயன்றவர் என்று பல அடையாளங்கள் கொண்டவர் அவர். அவரது கொலைக்குப் பிறகு, பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எப்போதும் ஒரு பதற்றம் நிலவுகிறது. கொலைக்குப் பின்னணியில் ஆற்காடு சுரேஷ் கும்பலின் பழிவாங்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தினங்கள், ஆண்டு நிறைவுகள், அல்லது அவருடன் தொடர்புடைய நாட்களில் போலீஸ் எப்போதும் உஷாராக இருக்கிறார்கள்.

இன்று அவரது பிறந்தநாள் என்பதால், காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது பழைய வீடு, கொலை நடந்த இடம், கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களைச் சுற்றி அதிக எண்ணிக்கையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! பொன்னை பாலுவுக்கு இடைக்கால ஜாமீன்..! கோர்ட் உத்தரவு..!

 ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்த நாளையொட்டி இன்று பெரம்பூர் வேணுகோபால் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலையாளிகளில் முக்கிய நபரான பொன்னை பாலு, அவரது தாயாரின் மரணத்தையொட்டி 5 நாட்கள் இடைக்கால ஜாமீனில், புழல் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: எனக்கு ஸ்டாலின் பெயர் வைக்க காரணம் இது தான்..! மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் உரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share