×
 

எனக்கு ஸ்டாலின் பெயர் வைக்க காரணம் இது தான்..! மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் உரை..!

மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின் தமிழில் பெயர் சூட்டுங்கள் என அறிவுரை வழங்கினார்.

சென்னை திரு வி க நகரில் 21.50 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையின் கட்டமைப்பு மற்றும் வசதியை சிறந்த முறையில் உருவாக்கிட திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

சென்னையில் மேம்பாலங்கள், சுரங்கங்கள், மெட்ரோ ரயில் என அனைத்தும் கொண்டுவரப்பட்டது திமுக ஆட்சியில் தான் என்று குறிப்பிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் சென்னையின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். சென்னையில் 516 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 19 புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் திமுக ஆட்சியில் 2,359 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 19000- க்கும் மேற்பட்ட சாலைகள் போடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். சென்னை வெள்ளத்தில் தத்தளிக்காமல் இருப்பதற்காக திமுக கொண்டு வந்த திட்டங்கள் தான் காரணம் என்று மறந்துவிடாதீர்கள் என்றும் சென்னையில் 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பது நமக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நீங்களாம் ஒரு முதல்வர்? கிரிமினல்களின் சொர்க்க பூமி தமிழ்நாடு...! அதிமுக கடும் கண்டனம்..!

பத்து மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்த முதலமைச்சர் குழந்தைகளுக்கு அழகிய தமிழில் பெயர் சூட்டங்கள் என்று அறிவுரை வழங்கினார். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் பேரில் கலைஞர் வைத்திருந்த நம்பிக்கையால் தான் தனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டப்பட்டது என்றும் குறிப்பிட்டு பேசினார். ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லை என சிலர் கூறும் நிலையில் அது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 

இதையும் படிங்க: வட மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லையா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share