×
 

ஜாமீனை ரத்து பண்ணுங்க... இல்லைனா... ஆம்ஸ்ட்ராங் மனைவி ஹைகோர்ட்டில் முறையீடு...!

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அவரது மனைவி பொற்கொடி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14 அன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.

தந்தையின் இறுதிச் சடங்கு மற்றும் ஈம காரியங்களை நடத்துவதற்காக அவரது மகன் ஏ 3 குற்றவாளியான அஸ்வத்தாமனுக்கு அக்டோபர் 28ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து சதீஷ், சிவா, ஹரிஹரன் ஆகிய மூன்று பேருக்கும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் போதே தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் வெளியில் வந்தால் ஆதாரங்களை அழிக்க நேரிடும் என்றும் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... உயிருக்கு ஆபத்து... ஆற்காடு சுரேஷ் மனைவியின் ஜாமீன் மனு தள்ளுபடி...!

எனவே அவர்களுக்கு ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் என்றும் தன் கணவனின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தவர்கள் அனைவரையும் மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: ரவுடி நாகேந்திரன் மரணம்... உடல் முன்பாக மகனுக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share