×
 

என்னது.. அருணாசலமா..?? எடுங்க முதல்ல.. தி.மலை பேருந்துகளில் இருந்த அருணாசலம் பெயர் நீக்கம்!

தமிழக அரசுப் பேருந்துகளில், திருவண்ணாமலை என்பதற்கு பதிலாக அருணாசலம் என்ற பெயர் பலகை இருந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் பெயர், அரசுப் பேருந்துகளில் “அருணாசலம்” என்று மாற்றப்பட்டது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை, சைவ சமயத்தின் புனித தலங்களில் ஒன்றாகவும், தமிழர் அடையாளத்துடன் பின்னிப்பிணைந்த பெயராகவும் விளங்குகிறது. 

இந்நிலையில், பேருந்துகளில் “அருணாசலம்” என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது, தமிழர் அடையாளத்தை அழிக்கும் முயற்சியாக சிலர் கருதினர். இது குறித்து பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அருணாசலம், திருவண்ணாமலையில் உள்ள புனித மலையைக் குறிக்கும் பெயராகும், இது “சிவப்பு மலை” என்று பொருள்படும். ஆனால், திருவண்ணாமலை என்ற பெயர் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்த மாற்றம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இது திமுக அரசின் “திராவிட மாடல்” அரசியலின் ஒரு பகுதியாகவும், தமிழர் அடையாளத்தை மாற்றும் முயற்சியாகவும் சிலர் விமர்சிக்கின்றனர். இந்த விவகாரம் பரவலான கவனத்தைப் பெற்றதையடுத்து, போக்குவரத்துத் துறை “அருணாசலம்” என்ற பெயரை நீக்கி, மீண்டும் “திருவண்ணாமலை” என்று மாற்றியது. இந்த அதிரடி முடிவு, மக்களின் எதிர்ப்பு மற்றும் அடையாள உணர்வின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது. 

இதையும் படிங்க: என்ன ஒரு மனுஷனா கூட பார்க்கல.. அவங்களுக்கு சொத்தா.. விரக்தியில் Ex. மிலிட்டரி செய்த விபரீத செயல்..!

தமிழ்நாடு அரசு இதற்கு உரிய விளக்கம் அளிக்கவேண்டும் எனவும், இத்தகைய மாற்றங்களுக்கு முன் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம், அடையாள அரசியல் மற்றும் பண்பாட்டு உணர்வு குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

இதனிடைய இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சங்கராபுரம் கிளை பேருந்து கள்ளக்குறிச்சி முதல் திருப்பதி வரை செல்லும் அரசு பேருந்தில் அருணாசலம் என ஆங்கிலத்தில் டிஜிட்டல் போர்டில் வருவதை சங்கராபுரம் கிளை மேலாளர் அவர்கள் மூலம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவித்து கொள்ளப்படுகிறது, என்று குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளில் "அருணாசலம்" என்று எழுதப்பட்டிருந்தது என்றும் திருவண்ணாமலைக்கு அடிக்கடி வரும் வெளி மாநில மக்கள் இந்த ஊர் பெயரை அருணாசலம் என்று தான் அழைக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமும் பல லட்சம் ஆந்திர பிரதேச மக்கள் திருவண்ணாமலை வருகிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளூர் விதிகளை மதிப்பது இல்லை, கோவில் வளாகத்தில் கூட விதிகளை மதிப்பது இல்லை என்று புகார்கள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் திருவண்ணாமலை என்ற பெயரை கூட அவர்கள் சொல்ல விரும்புவது இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

அருணாசலம் என்ற பெயர் பலகை நீக்கப்பட்டதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், இந்த முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசுப் பேருந்துகளில் இருந்து அருணாசலம் பெயர் பலகை நீக்கப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு தரப்பில் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதியில்லை.. காரணம் இதுதான்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share