×
 

சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதியில்லை.. காரணம் இதுதான்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரூ.276 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 4 டோல்கேட்களில் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

அதன்படி கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில், வரும் 10ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த், கிருஷ்ணா.. நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் அதிரடி..!

சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க தமிழக டிஜிபி, தென் மண்டல ஐஜிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகையைத் தீர்க்காமல் பிரச்சனையை நீட்டித்துக் கொண்டே இருந்தால், ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடிக்கு மேல் உயர்ந்துவிடும் என்று கூறி நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க: போதைப் பொருள் வழக்கு; மீண்டும் ஶ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share