மருத்துவ இடங்கள் சர்ச்சை... உதயநிதிக்கு இது தெரியாதா..? அமைச்சர் அருண்ராஜ் கிடுக்கிப்பிடி கேள்வி..!
மருத்துவ இடங்கள் தொடர்பான உதயநிதியின் கேள்விகளுக்கு அமைச்சர் அருண் ராஜ் பதில் கொடுத்தார்.
மருத்துவ இடங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ் பதில் கொடுத்துள்ளார். உயர் சிறப்பு மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும் மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி அறிவாரா? என கேட்டுள்ளார்.
நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? என்று கேட்டார். இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது?... இன்று முதலமைச்சர் விஜய் தரப்போகும் குட்நியூஸ்...!