×
 

திருச்செங்கோட்டில் போட்டியா? தவெக அருண்ராஜ் பரபரப்பு பேட்டி..!

திருச்செங்கோட்டில் போட்டியிட இருப்பதாக வெளியான தகவல் குறித்து தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பேட்டியளித்தார்.

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களுக்கான உத்தேச பட்டியலை விஜய் தயாரித்து வைத்துள்ளதாகவும் தொகுதிக்கு நான்கு பேர் வீதம் அவர் தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதில் 60% மாவட்ட செயலாளர்களுக்கும், பெண்களுக்கும் நாற்பது சதவீதம் பிரபலங்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக இன்று முதல் வேட்பாளர்களை தமிழக வெற்றிக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. முதல் வேட்பாளராக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் அருண் ராஜ் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்தின் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 20 வேட்பாளர்களின் பட்டியல் தயாராக உள்ளதாகவும் விரைவில் அறிமுகம் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவெக முதல் வேட்பாளர் அருண்ராஜ்?... சூடு பிடிக்கும் அரசியல் களம்... விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு...!

இந்த நிலையில், திருச்செங்கோட்டில் போட்டியிட இருப்பதாக வெளியான தகவல் குறித்து தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பேட்டியளித்தார். திருச்செங்கோட்டில் போட்டியிட இருப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை விஜயே அறிவிப்பார் என்றும் தெரிவித்தார். நேர்காணல் நடத்தியே வேட்பாளர்களை விஜய் தேர்வு செய்வார் என்றும் தமிழக வெற்றி கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வருவது பூத் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்... ஜனவரியில் வேட்பாளர் தேர்வு... விஜயின் அதிரடி முடிவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share