×
 

தவெக முதல் வேட்பாளர் அருண்ராஜ்?... சூடு பிடிக்கும் அரசியல் களம்... விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு...!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் தேர்தல் வேட்பாளராக அருண் ராஜ் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

த.வெ.க, 2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி. ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்தை இந்த நிகழ்வு முடக்கிய நிலையில் தற்போது மீண்டு வருகிறது. சமீபத்தில் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் ஈரோட்டில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார். ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணல் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களுக்கான உத்தேச பட்டியலை விஜய் தயாரித்து வைத்துள்ளதாகவும் தொகுதிக்கு நான்கு பேர் வீதம் அவர் தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 60% மாவட்ட செயலாளர்களுக்கும், பெண்களுக்கும் நாற்பது சதவீதம் பிரபலங்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்... ஜனவரியில் வேட்பாளர் தேர்வு... விஜயின் அதிரடி முடிவு...!

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக இன்று முதல் வேட்பாளர்களை தமிழக வெற்றிக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் வேட்பாளராக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருள்ராஜ் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் அருண் ராஜ் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வேட்பாளர்களின் பட்டியல் தயாராக உள்ளதாகவும் விரைவில் அறிமுகம் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: கரூர் பெருந்துயரம்... ஹைகோர்ட் விசாரணை நடைமுறையில் தவறு... கறார் காட்டிய உச்ச நீதிமன்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share