அஜித் குமார் போன்று புனிதன் கொலை..? விசாரிங்க சிஎம் சார்..! Tvk அருண்ராஜ் வலியுறுத்தல்..!
விசாரணை கைதி புனிதன் மரண விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அருண்ராஜ் வலியுறுத்தினார்.
சென்னை புழல் மத்திய சிறையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை கைதியாக இருந்த புனிதன் என்ற இளைஞர் திடீரென உயிரிழந்தார். இது வெறும் இயற்கை மரணமா அல்லது ஏதோ மர்மம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. புனிதன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, திடீராக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தகவல் வெளியானது. இதனால், அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். தமிழகத்தை உலுக்கிய கொடூர சம்பவமான மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணம் போன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி மர்மமான முறையில் உயிர் இழந்திருக்கும் செய்தி பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது என தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு குழு செயலாளர் அருண் ராஜ் கூறினார்.
உயிரிழந்த நபர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பது என்பது தெரிகிறது என்றும் எவராக இருந்தாலும் சட்டத்தின் படி விசாரித்து நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை வழங்குவதே நீதியை நிலைநாட்டும் எனவும் கூறியுள்ளார். இவ்வாறு இருக்கையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது என ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்ததாக காவல்துறை கூறுகிறது என்றும் ஆனால், உயிரிழந்த புனிதனின் உடலில் காயங்கள் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்ராஜ் அட்டாக்..!!
உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது உண்மை என்றால் உடலில் காயங்கள் எப்படி வந்தது என்று கேட்டுள்ளார். காவல்துறை, தனது கட்டுப்பாட்டை மீறி பல நாட்கள் ஆகி விட்டது. அராஜகமும், அத்துமீறலும் தான் தமிழ்நாடு காவல்துறையில் பெருகி போய் கிடக்கிறதே என்று சாடி உள்ளார். கைதிகளை அடித்து துன்புறுத்தும் அதிகாரத்தை காவல்துறைக்கு இல்லை என்றும் சிறைக் கைதி மரணத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு என்ன நடந்தது என விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அருண்ராஜ் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அடுத்த பட்ஜெட்டை TVK தாக்கல் செய்யும்... இந்த பட்ஜெட்டுக்கு ஜீரோ மார்க்... அருண்ராஜ் விளாசல்..!