சூடு பிடிக்கும் கரூர் சம்பவம்... ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் தொடங்கியது தீவிர விசாரணை...!
கரூர் துயரச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக 8 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில் குழு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களைப் போலவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் உற்சாகமாக நடத்தி வந்தார். அவரைக் காண அலைக்கடலென மக்கள் குவிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தது.
கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வந்தார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக கரூரில் நடந்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்டு நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அது மட்டுமல்லாது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியது. கூடுதல் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக எட்டு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் கரூர் சம்பவம்... தாராளமா செய்ங்க! கிரீன் சிக்னல் காட்டிய நீதிமன்றம்...!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில், ஐஜி தலைமையிலான குழுவில் கூடுதலாக 8 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கவின் கொலை... பெண்ணின் தந்தை போட்ட மாஸ்டர் பிளான்! தோண்ட தோண்டக் கிடைக்கும் பகீர் தகவல்