கைகளில் கருப்பு பட்டை... திமுக அரசுக்கு எதிர்ப்பு! சட்டப்பேரவைக்குள் ENTRY கொடுத்த அதிமுக உறுப்பினர்கள்...!
கரூர் சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்ட நிகழ்வுகளை கண்டித்து சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்.
ஜனவரி ஆறாம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் தொடங்கியது. நான்கு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. கடந்த கூட்டத்தின் போது 2025-26 ஆம் ஆண்டுக்கான பொதுபட்ச தாக்கல் ஆனது. அதன் மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆறு மாத காலத்தில் சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் நேற்று சட்டபேரவை கூடியது.
தமிழக சட்டப்பேரவை நேற்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் இறந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கூடியது.
இதையும் படிங்க: கட்சிக்குள்ளேயே போராட்டம்... வினோதம் தான்! சபாநாயகருடன் ராமதாஸ் தரப்பு பாமக எம்எல்ஏக்கள் சந்திப்பு...!
கையில் கருப்பு பட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்டு சம்பவங்களை கண்டித்து கையில் கருப்பு பட்டை அணிந்து கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எத்தனை நாட்களுக்கு சட்டசபை கூட்டம்? ... சபாநாயகர் அப்பாவு முக்கிய அறிவிப்பு...!