ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் சட்டப்பேரவை கூட்டம்..! உறுப்பினர்கள் வாழ்த்துரை..!
ஜே சி டி பிரபாகர் தலைமையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான அரசு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முக்கிய தருணத்தை எதிர்நோக்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரிய கட்சியாக உருவெடுத்த நிலையில், கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள விஜய், ஆளுநர் உத்தரவின்படி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாடு ஹங் அசெம்பிளியாக மாறியது. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவை. தவெகவுக்கு மட்டும் 108 இடங்கள் கிடைத்த நிலையில், காங்கிரஸ் (5), சிபிஐ, சிபிஐ(எம்), விசிக (2), ஐயூஎம்எல் (2) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று 120-க்கும் மேல் எம்எல்ஏக்களின் ஆதரவை உறுதி செய்தார் விஜய்.
இதனைத் தொடர்ந்து மே 10-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் 9 தவெக அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்தபோதே, பெரும்பான்மையை சட்டமன்றத் தளத்தில் நிரூபிக்க வேண்டும் என்ற தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி சட்டப்பேரவை இரண்டாம் நாள் கூட்டமான இன்று தனது பெரும்பான்மையை தமிழக வெற்றி கழகம் நிரூபிக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING: சபாநாயகர் ஆகிறார் ஜேசிடி பிரபாகர்..! போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு..!!
தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒருமனதாக சபாநாயகராக ஜே.சிடி பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவரிடம் பேரவையை வழிநடத்தும் பொறுப்பை கருப்பையா ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் சபாநாயகர் உள்ளிட்டருக்கு வாழ்த்து தெரிவித்து பேசி வருகின்றனர். துணை சபாநாயகராக ரவிசங்கரும் இன்று தனது பொறுப்பை ஏற்று இருக்கிறார்.
இதையும் படிங்க: ஆண்டவன் மீது ஆணையாக..! விஜயை பார்த்து உறுதிமொழி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்..!