#BREAKING: தவெக ஆட்சியின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! உதயநிதி, EPS, OPS பதவியேற்பு..!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களை கைப்பற்றி ஒற்றைப் பெரும்பான்மைக்கு சற்றே குறைவான இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட சில ஆதரவுடன் த.வெ.க அரசு அமைக்கப்பட்டு, விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்தப் புதிய அரசியல் யதார்த்தத்தில், எதிர்க்கட்சியாக மாறிய தி.மு.க மற்றும் அதிமுகவின் முக்கியத் தலைவர்களின் பதவியேற்பு, 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக்கியது. இன்று காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது.
புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட இந்த நிகழ்வு, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. த.வெ.க எம்எல்ஏக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களின் வருகை மற்றும் அவர்களின் பதவியேற்பு பெரும் கவனத்தை ஈர்த்தது. தி.மு.க சட்டமன்றக் குழு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பல தடைகளை தாண்டி.. விஜய் தலைமையில் புதிய அரசு..!! நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..!!
இரண்டாவது பெரிய கட்சியான தி.மு.கவின் எதிர்க்கட்சித் தலைவராக இந்த நிலையில் சட்டப்பேரவையில் சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சேகர்பாபு, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர்.
இதையும் படிங்க: #BREAKING: ஆட்சி அமைக்கும் கட்சிக்கு EPS வாழ்த்து..! யாரா இருக்கும்..? பொடிவைத்த எடப்பாடி.!