#BREAKING: ஆட்சி அமைக்கும் கட்சிக்கு EPS வாழ்த்து..! யாரா இருக்கும்..? பொடிவைத்த எடப்பாடி.!
புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துக்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவி குறித்த பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துக்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-இல் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அரசியல் களம் தீவிரமடைந்தன. இந்த நிலையில் அதிமுகவின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பலர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டுக்கு மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நடவடிக்கை “ரிசார்ட் அரசியல்” என அழைக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் சென்னைக்குத் திரும்பியது மேலும் புதிய ஊகங்களுக்கு வழி வகுத்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்றன. விஜய் தலைமையிலான தவெக பெரும்பான்மைக்கு முயற்சி எடுத்து வந்த நிலையில், அதிமுகவின் எம்எல்ஏக்கள் புதுச்சேரியின் பூர்ணாங்குப்பம் பகுதியில் உள்ள சொகுசு ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி இருந்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில் புதிதாக பதவி ஏற்கும் அரசுக்கு வாழ்த்துக்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். இது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: திக்.. திக்.. அரசியல் களம்..! மூத்த நிர்வாகிகளுடன் EPS தீவிர ஆலோசனை..!
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் அரசு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார் தவிர யார் என அவர் குறிப்பிடாதது மேலும் பல சந்தேகங்களை எழுப்பிள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் எடப்பாடியார் ஆட்சி..! நல்லதே நடக்கும்… தம்பிதுரை நம்பிக்கை..!