×
 

சட்டசபை 2026: பெரும் எதிர்பார்ப்புடன் 3 ஆம் நாள் அமர்வு தொடக்கம்..!! முதல்வர் விஜய் என்ன பேசுவார்...?

சட்டப்பேரவையில் மூன்றாம் நாள் அமர்வு தொடங்கியது.

தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 18 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் அவர்களின் உரையுடன் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று, இன்று மூன்றாம் நாளான ஜூன் 23 அன்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் பதிலுரை ஆற்றுகிறார்.

இந்த அமர்வு தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைக் கூட்டமாக இது அமைந்துள்ளது. ஆளுநர் உரையின் போது தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட்டு, தேசிய கீதம் இருமுறை ஒலிக்கப்பட்டது. இது சட்டப்பேரவை மரபுக்கு ஏற்ப நடைபெற்ற சுமுகமான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. 

முதல் நாள் அமர்வில் இறப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டாம் நாளான ஜூன் 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தீவிரமடைந்தது. தவெக எம்எல்ஏக்கள் சக்திவாய்ந்த உரைகளை ஆற்றினர். பொருளாதார மீட்டெடுப்பு, ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த ஆட்சி, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதத்துக்கு வந்தன. எதிர்க்கட்சியினரான திமுகவினர் மின்வெட்டு, பெண்கள் மீதான குற்றங்கள் உள்ளிட்ட பிரச்னைகளை எடுத்துக்காட்டினர். முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சித் தலைவர்களின் குறைகளைக் குறிப்பெடுத்துக்கொண்ட காட்சிகள் வைரலாகின. அமைதியாகக் கேட்டு, குறிப்புகள் எடுக்கும் அவரது அணுகுமுறை பலராலும் பாராட்டப்பட்டது. 

இதையும் படிங்க: "சரித்திரம்"... ஒரு நிமிடம் கூட BREAK இல்ல..! பேரவை நேரலை ஒளிபரப்பில் சாதனை..!!

இன்றைய மூன்றாம் நாள் அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்ட இரு மொழிக் கொள்கைத் தொடர்ச்சி, சமூக நீதி கணக்கெடுப்பு, சட்ட ஒழுங்கு, சுரங்கத் தொழில் ஒழுங்குமுறை, வரி ஏய்ப்பு தடுப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை ஆற்றுகிறார். இந்த உரையில் புதிய அரசின் கொள்கைகள், எதிர்காலத் திட்டங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அளிக்கப்படும் விளக்கங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் தொடர்ச்சி ஆகியவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: ரீல்ஸ் போடும் சிங்கப் பெண் படை..! பேரவையில் உதயநிதி, ஆதவ் காரசார வாதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share