×
 

பினாமிகளைப் பிடித்து உள்ளே போடுங்கள்.! பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!!

பினாமிகள் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

கனிமவள மேலாண்மை, சட்டவிரோத குவாரிகள் போன்ற விவகாரங்கள் தமிழக அரசியலில் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்திய கூட்டத்தொடர்களில் பல்வேறு விவகாரங்களில் பேசியுள்ளார்.

அரசியல்வாதிகள் யாரும் தங்கள் பெயரில் எந்த சொத்துகளையும் வைத்துக்கொள்வதில்லை என்றும் மாறாக அவர்களின் குடும்பத்தினர் பெயரில், பினாமிகள் பெயரில் தான் மருத்துவமனைகள், கல்லூரிகள் உள்ளன எனவும் தெரிவித்தார். இது எல்லாம் கனிமவளங்களை சட்டத்துக்கு புறம்பாக கொள்ளை அடித்த பணத்தில் வந்தவை தான் என்றும் முதலில் பினாமிகளை பிடித்து உள்ளே போடுங்க. அப்பதான் அவர்கள் பின்னால் உள்ள அரசியல்வாதிகள் யார் என்று தெரியும் எனவும் தெரிவித்தார்.

பினாமி மூலம் கனிம வளத்தை கொள்ளையடித்து கல்லூரிகள் நடத்துபவர்கள் மீது கூடிய விரைவில் முதலமைச்சர் விஜய் FINE போடுவார் என்றும் கொள்ளையடித்தவர்களை விரைவில் கைதும் செய்வார் எனவும் தெரிவித்தார். மலைகள், சுரங்கங்களில் பினாமிகள் மூலம் கனிமங்களை எடுத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சியினரை ஆத்திரமூட்டும் அமைச்சர்கள்..! முதல்வர் ரசிப்பது மகா கேவலம்..! ஐ.லியோனி கண்டனம்.!

நாங்கள் ஒரு சுரங்கத்தையும் தொடமாட்டோம், மணலையும் தொட மாட்டோம். எல்லா சொத்துக்களையும் மக்களிடம் சேர்ப்பது அமைச்சரின் பொறுப்பு என்று முதல்வர் கூறியுள்ளார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். பொதுப்பணித்துறை தொடர்பான விவாதங்களில் பினாமி பெயரில் டெண்டர்கள் வழங்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பேட்ச் வொர்க் போன்ற பணிகளில் ஊழல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share